கோவில்பட்டியில் நடந்த அகில இந்திய ஹாக்கி போட்டி சாம்பியன் பட்டம் வென்றது போபால் அணி
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=P6vlNrfFb00
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது. 2ஆவது இடத்தை புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி பெற்றது. முன்னதாக 3,4 இடங்களுக்கு நடைபெற்ற போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், பெங்களூர் கனரா வங்கி அணியும் மோதின. இதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு அதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றிப் பெற்று மூன்றாமிடம் பிடித்தது. • #Kovilpatti #Hockey #BhopalTeam
#############################