தென்னாடுடைய சிவனே போற்றி Thennaadudaiya Sivane Potri Sivan Krishnaraj Vijay Musical











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=TngDvpdVZJM

Thennaadudaiya Sivane Potri | Sivapaatham | Krishnaraj | Tamil Lyrical Video | Vijay Musicals | Music : Kanmaniraja | Composer : Varasri | Video : Kathiravan Krishnan • #thennaadudaiyasivanepotri#sivan#tamil • தென்னாடுடைய சிவனே போற்றி | சிவபாதம் | கிருஷ்ணராஜ் | தமிழ் பாடல்வரிகள் வீடியோ | விஜய் மியூஸிக்கல்ஸ் | இசை : கண்மணிராஜா | இயற்றியவர் : வாரஸ்ரீ | வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் • Lyrics | பாடல்வரிகள் : • தென்னாடுடைய சிவனே போற்றி • எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி • கண்ணாய் உலகைக் காப்பாய் போற்றி • கயிலைமலையானே போற்றி போற்றி • அம்மையும் அப்பனும் ஆதியும் நீயே • ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர • ஆகமவேதத்தின் அந்தமும் நீயே • மும்மையும் ஆகிய மூலமும் நீயே • முட்கற்பரஞ்சுடர் மூர்த்தியும் நீயே • செம்மையும் வையத்து ஜீவனும் நீயே • சித்தியெல்லாம் தரும் தெய்வமும் நீயே • நன்மைக்கும் தீமைக்கும் நடுவனும் நீயே • நாடக உலகத்தின் நாயகன் நீயே • எம்மையும் ஆண்டருள் ஈசனும் நீயே • ஏகாலிங்கேஸ்வரா இறங்கிடுவாயே • அன்பே சிவமாக அமர்ந்தவன் நீயே • ஆருயிர் மருந்தாய் ஆனவன் நீயே • பண்பே உருவாக பரந்தவன் நீயே • பாரெங்கும் ஞானமாய் விரிந்தவன் நீயே • விண்ணோர்கள் யாவர்க்கும் மேலவன் நீயே • சிற்றினங்கள் யாவும் தீர்ப்பவன் நீயே • கண்ணேறு கழித்த காவலன் நீயே • காலத்திரிசூலம் கொண்டவன் நீயே • மண்ணோர் வணங்கிடும் மாமுதல் நீயே • வைத்தியலிங்கேஸ்வரா மனமிரங்காயே • சக்தி சிவமாக சமைந்தவன் நீயே • சர்வமும் தானாகத் தழைப்பவன் நீயே • புத்தியும் முக்தியின் மூலமும் நீயே • முழுமுதற்பொருளாய் முகிழ்த்தவன் நீயே • புத்தியின் முக்திக்கு வித்தும் நீயே • பூரணமும் அதன் காரணமும் நீயே • சித்தியும் சித்திக்கு ஜீவனும் நீயே • செல்வமெல்லாம் தரும் செம்பொருள் நீயே • பக்தியும் பக்தியின் பயனும் நீயே • பஞ்சலிங்கேஸ்வரா பதம் தருவாயே • கைலாய பர்வத கர்த்தனும் நீயே • கங்கை பிரவாகத்தை காத்தவன் நீயே • மெய்யெல்லாம் வெண்நீறு கண்டவன் நீயே • பிரம்ம கபாலத்தைக் கொண்டவன் நீயே • ஐம்பெரும் பூதத்தை ஆள்பவன் நீயே • அஷ்டமா சித்திகள் அருள்பவன் நீயே • வைத்தார்க்கும் வாழ்வை அளிப்பவன் நீயே • வான்பிறை சூடிய வள்ளலும் நீயே • செய்யத்திருமேனி கொண்டவன் நீயே • செல்வ லிங்கேஸ்வரா சீர்தருவாயே • நஞ்சுண்ட கண்டத்து நாதனும் நீயே • நால்வர்க்கு வேதம் நவின்றவன் நீயே • புற்றுண்ட ப்ரம்மனைக் காத்தவன் நீயே • கோவணம் பூண்ட குலாந்தகன் நீயே • அர்ஜுனர்க்கு கணை அளித்தவன் நீயே • ஆமைஓடு கையில் எடுத்தவன் நீயே • மார்க்கண்டேயன் உயிர் மீட்டவன் நீயே • மதயானை தோலுரிபூண்டவன் நீயே • முப்புரம் எரித்திட்ட முதல்வனும் நீயே • மோனலிங்கேஸ்வரா முகம்பாராயே • ப்ரமனும் காணாத முடியுடையோனே • பேரண்டம் காத்திடும் அருளுடையோனே • திருமாலும் அறியாத அடியுடையோனே • தேவேந்திரனுக்கருள் செய்திடுவோனே • ராவணன் போற்றிய அருளுடையோனே • சாம தானமதில் மகிழ்வுடையோனே • நாதப்படம் கொண்ட சடையுடையோனே • நல்லருத்ராட்சத்தின் அணியுடையோனே • தோடுடைய சேவிதனையுடையோனே • சோமலிங்கேஸ்வரா அருள்பெருமானே • காலனைக் காலால் உதைத்தவன் நீயே • காடுதனில் நடம் ஆடியும் நீயே • சூலம் எடுத்திடும் சுந்தரன் நீயே • சுத்த சுடர்வெளி ருத்திரன் நீயே • மாதொருபாகத்து மங்களன் நீயே • மன்றினில் ஆடிடும் கூத்தனும் நீயே • பாகிரதன் துயர் தீர்த்தவன் நீயே • பாபநாசனென்னும் பரமனும் நீயே • ஆதிதேவன் என்ற ஆண்டவன் நீயே • ஆத்மலிங்கேஸ்வரா அருள்புரிவாயே • தேவார மூவருக்கு அருள்புரிந்தோனே • திருவாசகத்து மனங்கனிந்தோனே • ஞானசம்பந்தருக்கு நலமளித்தோனே • ஞானப்பால் ஊட்டியே இதழ் கனிந்தோனே • வாகீசருக்குயர் வரமளித்தோனே • வல்லதோர் துன்பத்தில் சிறைவிடுத்தோனே • ஆரூரன் சுந்தரர்க்கு அமுது தந்தோனே • ஆயிரம் பொற்காசு அளித்துயர்ந்தோனே • மாணிக்க வாசகர் மனமுறைந்தோனே • வானலிங்கேஸ்வரா அருள்பெருமானே • ஆதிசங்கரர்க்கு அருள்தணிந்தோனே • ஆரங்கம் வேதத்தின் முறைபுகன்றோனே • போகமுனிக்கருள் புரிந்திடுவோனே • புலிப்பாணிதனக்கொரு புகழும் தந்தோனே • கொங்கண மாமுனி கும்பிடும் தேனே • கோரக்கர் பணித்திட கோவில் கொண்டோனே • வள்ளுவர்தமக்கொரு வரமளித்தோனே • மச்சமுனிக்கொரு மதியளித்தோனே • பிரம்மமுனிக்குயர் வளம் கொடுத்தோனே • பிரம்மலிங்கேஸ்வரா அருள்பெருமானே • திருமூலநாயர்க்கு சீர்கொடுத்தோனே • சேக்கிழார் பாடற்கு அருள்சுரந்தோனே • கருவூரின் தேவர்க்கு கதியளித்தோனே • காரைக்கால் அம்மைக்கு களிகொடுத்தோனே • பட்டினத்தடிகளைத் தடுத்தாட்கொண்டோனே • வாரியார் ஸ்வாமியை வாழவைத்தோனே • தாயுமானார்க்கு தாழ்கோடுத்தோனே • நம்பியாண்டார்க்கு நலமளித்தோனே • காஞ்சிமாமுனிவர்க்கு கதியளித்தோனே • ஹட்சிலிங்கேஸ்வரா அருள்பெருமானே • தில்லைச் சிதம்பர ஸ்ரீநடராஜா • திருவாரூர்வாழ் ஸ்ரீதியாகராஜா • தென்பொதிகைவளர் குற்றாலநாதா • திருக்கச்சிநகர் வாழும் ஏகம்பவாணா • அண்ணாமலைவுறை அருணாசலீசா • அவிநாசியில் எழுந்தருள்தரும் நேசா • குங்குமணிப்பேரூர் பட்டீஸ்வரா • கொஞ்சிடும் மயிலை கபாலீஸ்வரா • எங்கும் பிரகாசிக்கும் எழிலுடை ஈசா • ஏகாலிங்கேஸ்வரா இறங்கிடு நேசா • சிவனை நினைத்தவர் தீவினை மாய்ப்பாய் • திருநீறு பூண்டவர் இன்னுயிர் காப்பாய் • சிவனை நினைத்தவர் வல்வினைத் தீர்ப்பாய் • சிவனடி காண்பவர் துயரங்கள் சாய்ப்பாய் • சிவனை நினைத்தவர் சிந்தையில் பூப்பாய் • சிவனடியாரது இல்லத்தில் வாழ்வாய் • சிவனை நினைவோர்க்கு செல்வங்கள் சேர்ப்பாய் • சினடியார்மனை சிறந்திடப் பார்ப்பாய் • சிவன்கோயில் வலம்வர சிவலோகம் அளிப்பாய் • தெய்வலிங்கேஸ்வரா திருவருள்புரிவாய் • மந்திரமாவது உன்திருநீறு • மனதுக்குகந்தது உன்திருநீறு • சுந்தரம் ஆவது உன்திருநீறு • துயர்களைத்தீர்ப்பது உன்திருநீறு • வேதத்தில் உள்ளது உன்திருநீறு • வெற்றியைத் தருவது உன்திருநீறு • சத்தியம் ஆவது உன்திருநீறு • சங்கடம் தீர்ப்பது உன்திருநீறு • பக்தியைத் தருவது உன்திருநீறு • பரமலிங்கேஸ்வரா என்முகம்பாரு

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org