முருகன் சுப்ரபாதம் Murugan Suprabhatham with Lyrics Tamil Murugan Songs Vijay Musicals
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=VzaEGdkyIWE
Thiru Murugan Suprabhatham with Lyrics • Album : Siragiri Velava • Singer : Ragam Sisters • Music : Sivapuranam D V Ramani • Lyrics : P Senthilkumar • Video : Kathiravan Krishnan • Produced by Vijay Musicals • #Murugansuprabhatam#Murugansong#VijayMusicals • • Lyrics : • ஓம் ஆனந்த வெள்ளமாய் ஆதவன் கிரணங்கள் அருளைப் பொழிந்திடுமே • வைகறை வேளையில் வடிவேலன் பொற்பாதம் அழைத்திடுமே • கூவிடும் பூங்குயில் வண்ணமயில் முருகனின் புகழ் பாடுமே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • பொழுது புலர்ந்தது பொற்கோழி கூவிற்று செங்கதிர்வேலவனே • சேவலும் மயிலுமுடைய சென்னிமலையானே தேவசேனாபதியே • சக்திவேல் தாங்கிவரும் சரவணனே சதாசிவ பாலகனே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • ஆர்வமோடு அடியார் கந்தசஷ்டி கவசம் பக்தியோடு முழங்குகிறார் • கூர்த்தரும் மலர்க்கண் பூத்து குணமுடன் எழுந்தருவாய் • சீத்தரும் மறையோர் போற்றித் துதிக்கும் அம்பிகை பாலகனே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • சரவணபொய்கையின் கண்மணியே கடம்பனே கார்த்திகேயனே • அன்னை அணைத்திட ஆறுமுகமான ஆதிபழனி ஆண்டவனே • தேவர்களின் துயர்தனை நீக்கிய குகனே குமரவேலே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • நடுநாயகமூர்த்தியாய் அங்காரகனாய் அஷ்டகிரஹங்களும் உனைத்தொழவே • நலம்தரும் நவகிரஹங்களும் உனைவலம்வர தரும் வரமே • செவ்வாய் தோஷம் நீங்க சென்னிமலையும் அங்காரகன் பரிகாரஸ்தலமே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • மன்னனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கிய முதல்வனே முருகனே • பதினாறு திருமூர்த்தங்களின் சாஹித்யமும் சென்னிமலையிலே • வையகமும் வானகமும் வளர்ந்தோங்கிய மாமலையே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • கார்த்திகை பெண்கள் பாலூட்ட வளர்ந்தவனே கார்த்திகேயனே • முருகனாய் வந்துதித்த மோஹனமே சக்திவேலனே • சூரர்குலம் வேரறுக்க தோன்றிய குலவிளக்கே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய ஸ்தனமே • கணப்பொழுதில் காத்திட வந்திடும் கருணைவடிவான குகனே • மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய ஸ்தனமே • கணப்பொழுதில் காத்திட வந்திடும் கருணைவடிவான குகனே • தினமுனைப் பணிந்து திருவருள் பெறபணிந்தோம் பாதமே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • குறுமணிக்கருள் செய்த குமரகுருபரனே குகனே சண்முகனே • வரும் அடியார்க்கும் அருளும் குஞ்சரி வள்ளி மணவாளனே • புண்ணாக்கு சித்தர்க்கு முக்தி தந்த சென்னிமலை ஆண்டவனே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • எல்லையிலா அழகுமிகும் அருணாச்சலன் மைந்தனே • கருணையே வடிவமாய் காட்சி தந்திடும் சரவணபவனே • அமிர்தவல்லி சுந்தரவல்லி போற்றிடும் மால்மருகனே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • க்ருதாயுகத்தில் மாலவன் பூஜித்த கனககிரியே சென்னிமலை • ப்ரீத்தாயுகத்தில் திருமகள் போற்றிய மகுடகிரியே சென்னிமலை • த்வாபரயுகத்தில் துர்கை வணங்கிய புஷ்பகிரியே சென்னிமலை • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • கலியுகத்தில் தேவேந்திரன் பூஜித்த சிரகிரியே சென்னிமலை • ஞானப்பழம் வேண்டி ஞாலம் சுற்றியவனுக்கு நிவேத்தியம் அதிகாலை • சனகாதி முனிவரெல்லாம் சந்ததம் போற்றிடும் சண்முகனே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • சிவனார் மனம்குளிர உபதேசம் செய்த சிங்காரவேலனே • தித்திக்கும் தமிழ்த் தேனும் திருப்புகழ் தினைமாவும் பக்தியுடன் • அனுதினமும் படியேறிப் பாடிப் பாதம் பணிந்தோமே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு அருளியவா • கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன் கருணையல்லவா • அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு அருளியவா • கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன் கருணையல்லவா • பன்னிருத் தோளழகா பங்கஜ மலைப்பாதா கோமளத்திருமுருகா • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • பழனியம்பதிக்கு இடும்பனுக்கு வழிகாட்டிய சென்னிமலை முருகனே • வேங்கை மரமாக நின்று லங்கை வள்ளியை மணந்த மணவாளனே • வேங்கை ரதமேறி வேண்டிய வரம் தரும் கண் கண்ட தெய்வமே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு படிக்காசு தந்தான் மலையே • சீர்வளரும் சென்னிமலை மேவிய செந்தமிழ்வாசா • பாருலகத்தில் அடியவர்த் துதித்திடும் சிரகிரி வேலவா • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி மலையேறிய அதிசயம் • திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம் கொணரும் அற்புதம் • உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி மலையேறிய அதிசயம் • திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம் கொணரும் அற்புதம் • நல்லது நடந்திட உன் அருள்வேண்டி சிரசுப்பூ உத்தரவு வழக்கம் • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா • விசாகப்பெருமானின் அரும் விலாசம் சென்னிமலையே • ஏகன் அநேகன் சண்முகனே யோகங்கள் தந்திடும் குகனே • கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்திடும் குமரகுருபரனே • திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
#############################