Ma mère est trop attrayante











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=pQz_e1NyYyA

கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா • Song : Adho Theriyudhu Elumalai • Album : Kadavul Bakthi • Singer : Ramu • Lyrics : Ulundurpettai Shanmugam • Music : Sivapuranam DV Ramani • Video : Kathiravan Krishnan • Produced By Vijay Musicals • #perumalsongs#govindagovindasong#VijayMusicals • பாடல்வரிகள் | LYRICS • சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம் • விஸ்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் • லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம் • வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் • அதோ தெரியுது ஏழுமலை எங்கள் பெருமாள் வாழும் மலை • இதோ இதோ என வேகம் வரும் என்றும் தணியாத தாகம் வரும் • கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தம் பஜகோவிந்தம் • கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா • மலையென்று சொன்னால் திருமலையே மனதில் நிற்பது திருமலையே • பதியென்று சொன்னால் திருப்பதியே திருமகள் வாழ்வது திருப்பதியே • பூலோக வைகுந்தம் திருப்பதியே பொன்மழைபொழிவது திருப்பதியே • வேதங்கள் போற்றிடும் திருப்பதியே விதியையும் மாற்றிடும் திருப்பதியே • கருடன் கொணர்ந்தது கருடகிரி ருஷபாசுரனால் ருஷபாத்ரி • நாராயணன் தரும் நாரணகிரி நரசிம்மன் பெயரால் சிம்மகிரி • அஞ்சனை தவத்தால் அஞ்சனாத்ரி ஆதிசேஷனின் ஷேசாத்ரி • ரிடபாசுரனால் ரிஷபகிரி ஏழுமலையானின் வேங்கடகிரி • காண்பது ஒருகணம் என்றாலும் கடவுளை நேரில் காண்போமே • மீண்டும் எப்போதும் இந்த பாக்யம் வேண்டும் வேண்டுமென வேண்டிடுவோம் • எண்ணிலாத்தலங்கள் இருந்தாலும் அப்போதைக்கப்போது கூட்டம் வரும் • ஏழுமலையானை பார்ப்பதற்கோ என்றும் எப்போதும் கூட்டம் வரும் • மலைமேல் கடல் வந்து புகுந்ததுவோ அலைமேல் அலையாய் தலைதெரியும் • திருநாள் எந்நாளும் திருநாள் தான் ஸ்ரீநிவாசன் புகழ் உலகெங்கும் • நின்றத் திருக்கோலம் காண்கையிலே நேரம் போவது தெரியாது • கண்டு கண்டு கண்ணில் நீர்பெருகும் திருப்ப மனமின்றி ஏங்கிடுமே • மலையடிவாரம் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருப்பார் • கபில தீர்த்தத்தில் குளித்திடுவோம் கலிகோபுரத்தைக் கண்டிடுவோம் • மாலவன் மேனியை அலங்கரித்த மாலைகள் மலையெங்கும் கமகமக்கும் • கோவிந்தன் நாமம் எதிரொலிக்கும் பக்தர்கள் வரிசை காத்திருக்கும் • ஒரே வரிசையில் ஒழுங்காக நவகிரஹநாயகர் நிற்கின்ற • அதிசயம் இங்கே நிகழ்ந்திடுமே ஆழ்வார் பாசுரம் இனித்திருக்கும் • எட்டுதிக்கு பாலகரும் எம்பெருமானை எதிர்பார்ப்பார் • அஷ்டலக்ஷ்மிகள் கூடிடுவார் கங்கை நீராட்ட வந்திருப்பார் • அர்த்ததீர்த்தம் பஞ்சாயுதம் நாரத தீர்த்தம் கிருஷ்ண தீர்த்தம் • பாண்டவர் தீர்த்தம் கோகற்பம் குமார தீர்த்தம் சுத்த தீர்த்தம் • பார்கவ புராண திதிர் தீர்த்தம் பாபவிநாசம் பைரவம் • கணேஷ தீர்த்தம் முதலாக கணக்கில் எண்ணி முடிந்திடுமோ • வராக பெருமான் புஷ்கரணி நீராடியபின் வேங்கடவன் • சந்நிதி காண சென்றிடலாம் சகலசௌபாக்யமும் பெற்றிடலாம் • பறவைகள் பாடும் சங்கீதம் தேவர்கள் ஓதும் நால்வேதம் • பள்ளியெழவே சுப்ரபாதம் கண்ணன் எழுந்தான் வேணுகானம் • தங்கவாசல் தாண்டியபின் நவரத்ன குவியலோ நெடுமாலொ • பச்சை கற்பூர வாசம் வரும் பார்க்க பார்க் மெய்சிலிர்க்கும் • வைகுந்தம் இங்கே வந்ததுவோ சொர்க்கபோகம் தந்ததுவோ • கருமாமணியைக் காண்பதற்கு கண்கள் கொடுத்து வைத்ததம்மா • நெஞ்சில் ஒருபுறம் மஹாலக்ஷ்மி மறுபுறம் அமர்ந்தாள் பத்மாவதி • இங்கே வந்தபின் வேறெதற்கும் அஞ்சேல் என்பான் திருமாலே • ஆயிரம் நிலவுகள் சேர்ந்தனவோ தாயினும் இனியவன் கருணைமுகம் • நம்விழி கூசும் என்றெண்ணி நாம் சற்றே மறைத்ததுவோ • என்னை நானே இழந்துவிட்டேன் ஏகாந்த சேவையில் கரைந்துவிட்டேன் • என்ன அதிசயம் இவன் தோற்றம் எங்கும் காணாத விந்தையம்மா • பாலினில் விழுந்த கருவண்டாய் பார்வை வீசி சிரிக்கின்றான் • வா என புன்னகை முகம் காட்டி ஸ்ரீநிவாசன் அழைக்கின்றான் • விஸ்வரூப தரிசனமே துலங்கி சேவை அற்புதமே • தோமாலை சேவை கண்டதுமே மாலை தொடுக்கச் சொல்லிடுமே • நீலமணிபோல் நெடுமேனி கோலாகுழல்மேல் மணிமகுடம் • வில்போல் புருவங்கள் நடுவினிலே ஸ்ரீபாதரேணு திருநாமம் • சூரிய சந்திரர் விழிகளிலே மகர குண்டலம் செவிகளிலே • வீணை நிமிர்ந்தது நாசியிலே முத்துக்கள் கொட்டின இதழ்களிலே • வானவில்லோ கன்னங்கள் சங்கு கழுத்தில் பதக்கங்கள் • பரந்த தோளில் ஆரங்கள் சங்கு சக்கர வண்ணங்கள் • விரிந்த மார்பில் கௌஸ்துபமும் சஹஸ்ரநாம சங்கிலியும் • மணமகள் பத்மாவதியோடு மஹாலக்ஷ்மியும் கொஞ்சிடுமே • சுந்தர சூழலோ உன்மேலே காஞ்சி மேகலை இடையினிலே • தசாவதார கச்சையிலே சூர்யகட்டாரித் தொங்கிடுமே • உதரபந்தனம் அணிவயிற்றில் வீரக்கழலணி சாரதியோ • வலக்கரம் பாதம் காட்டிடுமே இடக்கரம் அவனிடம் சேர்த்திடுமே • காலைப்பிடித்தால் மேல்வரலாம் காலகாலம் அருகிருந்து • கூடிக்கலந்து குலவிடலாம் குறிப்பை அறிந்துகொள் என்பானோ • தோளைப்பார்த்தவர் தோளே கண்டார் தாழைக் கண்டவர் தாழே கண்டார் • அங்கம் முழுதும் ரசிப்பதற்கு கண்களிரண்டு போதாதே • வானும் மண்ணும் அளந்த அடி பூமாதேவி வருடும் அடி • பெரிய சிறியத் திருவடிகள் இருவரின் சேவைகள் ஏற்றிடுவாய் • ஞாயிறு திங்கள் மங்கள நாள் செவ்வாய் தோறும் தெப்ப உலா • புதனன்று போக ஸ்ரீநிவாசன் கலசாபிஷேகம் ஏற்றிடுவான் • குருநாள் பாவாடை சேவை உண்டு வெள்ளியில் பூரா அபிஷேகம் • சனிநாள் விளக்குகள் ஏற்றிவைத்தால் வினைகள் விலகும் வெற்றிவரும் • அலர்மேல்மங்கை அன்புக்கரம் பற்றியத் திருக்கரம் ஆனந்தம் • ஊஞ்சல் கண்ணாடி சேவைகளே யாவும் அவனின் லீலைகளே • ஆவணி கார்த்திகை தை திங்களில் அழகனுக்கு ப்ரம்மோக்ஷபம் • சித்திரை கோயில் கணக்கர் விழா நரசிங்க யாதவர் பங்குனி விழா • ஸ்ரீஜெயந்தி உரியடி தீபாவளி யுகாதி ஏகாதசி ஸ்ரீராமநவமி • மோஹினி பவனி வைகாசியில் கோயிலையும் ஆழ்வாராய் கொண்டாடுவார் • பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் அதன்மேலும் • ஸ்ரீநிவாசன் புகழ் செழிக்கட்டும் கோவிந்தராஜன் அருள் கொழிக்கட்டும்

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org