நடிகர் விஜய் மாநாடு பற்றி ஜிகேவாசன் அதிரடி பேட்டி











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=y2gnQpUCrWc

#tamilnadu #tamil #news #tamilnews #chennai • #vijay #actarvijay #g.k.vasan #dmknews #dmk • #stalin #stalin_news #விஜய் #விஜய்-மாநாடு • #மாநாடு #vijay-manadu #manadu • #அன்னைஉள்ளம் #annaiullam • • ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நலத்திட்ட உதவிகள் • சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ளம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. • நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு அன்னை உள்ளத்தில் உள்ள முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது • தமிழக ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் குறிப்பாக துறை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலே பட்டமளிப்பு நடைபெற வேண்டும், இதில் அரசியலுக்கு காழ்ப்புணர்ச்சிக்கோ இடம் கொடுக்கக் கூடாது. • தமிழகத்தில் உள்ள மீனவர்களை தொடர்ந்து தாக்குவதும் கடத்துவதும் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார் மேலும் அவர் கூறுகையில், • தீபாவளி நேரம் என்பதால் மக்கள் கூடும் இடங்களில் வழிப்பறி கொள்ளை திருட்டு போன்றவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க காவல்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் ஒதுக்கிருப்பது மக்களிடையே மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, அதனால் பட்டாசு வெடிக்கும் நேரத்தை இரண்டு மணி நேரமாக அதிக தமிழக அரசு முன் வர வேண்டும். • நடிகர் விஜய் அவர்கள் புதிய கட்சி தொடங்கும் பொழுது தமிழ் மாநில காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்தது, • விஜய்யை பொருத்தவரை இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் அவர்களின் படங்களை கட் அவுட்களில் வைப்பது பாராட்டுக்குரியது, நேர்மை எளிமை தூய்மை இவர்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்திலே வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் படத்தை வைப்பது நான் மனதார பாராட்டுகிறேன், • மத்திய மாநில அரசு ஆதரவற்ற முதியோர்களுக்கு இது போன்ற ஆதரவு இல்லங்களில் நடத்தி வரும் வரும் தனியார் நிறுவனங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என தெரிவித்தார்.

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org